Ramanathapuram | Protest | குவிக்கப்பட்ட போலீசார் | ராமநாதபுரம் அரண்மனை அருகே பரபரப்பு

ராமநாதபுரத்தில் அம்மன் கோயிலை இடிக்க அதிகாரிகள் வருகை நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அரண்மனை அருகே உள்ள ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க உத்தரவு . ராமநாதபுரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள பிரபல அம்மன் கோயிலை இடிப்பதற்காக அதிகாரிகள் வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள முகவை ஊரணி மேல் கரையில், புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நீர்நிலை ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை இடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கோயிலை இடிப்பதற்காக நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடிப்பு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். தகவலறிந்து அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com