Ramanathapuram | ரூ.4 கோடியில் அரசு பள்ளிகளுக்கு கிளாஸ் ரூம் கட்டி கொடுத்த Martin Charitable Trust
ரூ.4.33 கோடியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட பணிகள் - மார்ட்டின் குழுமம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானையில் அரசு பள்ளிகளுக்கு Martin Charitable Trust சார்பில் 4 கோடியே 33 லட்சம் ரூபாயில் வகுப்பறை கட்டடம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. திருவாடானை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்ததி, கூடுதல் வகுப்பறைகள் கட்டி, மாணவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் நோக்கில் Martin Charitable Trust சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளன. திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 கோடி ரூபாயில் 8 வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளன. இதேபோல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 வகுப்பறை கட்டடங்கள், 16 கழிப்பறைகள், கலையரங்கம் மற்றும் நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் இரு தேர்களின் மராமத்திற்காக 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ.16 லட்சத்தில் இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. Trust இயக்குநர் லீமாரோஸ், மார்ட்டின் கூறியதாவது, ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் மார்ட்டின் அறக்கட்டளை செயல்படுவதாக கூறினார். குறிப்பாக 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு' பள்ளி திட்டத்தில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் நலத்திட்ட பணிகள் நடந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்தி இப்பகுதி மாணவர்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.
