கணவரை கண்டுபிடிக்க கதறும் மனைவி.. கடைசியாக நண்பரிடம் பேசிய கணவர்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு

திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ஆரோக்கியசாமி, ஜவுளிக்கடை மற்றும் ஆவின்பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 29ம் தேதி மதுரை செல்வதாகக் கூறிவிட்டு சென்ற வின்சென்ட், வீடு திரும்பவில்லை. அவர் ஓட்டிச் சென்ற டூவீலர் வீரசங்கிலிமடம் சாலையோரத்தில் கிடந்துள்ளது. கணவர் வீடு திரும்பாததால் மனைவி,, தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, வின்சென்ட்டிற்கு அப்பகுதியைச் சேர்ந்த 3 பேருடன் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. காணாமல்போன அன்று தன்னை யாரோ பின்தொடர்வதாக தனது நண்பரிடம் வின்சென்ட் கூறிய ஆடியோவும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனைவி, கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com