Ramanathapuram | தினமும் ராமேஸ்வரம் கோயில் செல்ல சிரமப்பட்ட சேதுபதி மன்னர் அருகிலேயே எழுப்பிய கோயில்
Ramanathapuram | தினமும் ராமேஸ்வரம் கோயில் செல்ல சிரமப்பட்ட சேதுபதி மன்னர் அருகிலேயே எழுப்பிய கோயில் ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் அமைந்துள்ள பர்வதவர்த்தினி சமேத முத்துராமலிங்க சுவாமி கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இணையானதாக கருதப்படக்கூடிய இந்த கோவில் 18 நூற்றாண்டில் ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. சேதுபதி மன்னர் தினம்தோறும் மண்டபம் வரை குதிரை மீது பயணம் செய்து பாம்பன் கடலை படகு மூலம் கடந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய சிரமமாக இருந்ததால் ராமநாதபுரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், 300 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.. கடந்த ஒன்றாம் தேதி, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில் இன்று 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. முத்துராமலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்..
