Ramanathapuram | குவைத்தில் மாயமான கணவர் | குழந்தைகளுடன் மனைவி கண்ணீர் பேட்டி
Ramanathapuram | குவைத்தில் மாயமான கணவர் | குழந்தைகளுடன் மனைவி கண்ணீர் பேட்டி #ramanathapuram #kuwait #family #thanthitv குவைத்தில் கணவர் மாயம் - ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை குவைத்தில் மாயமான கணவரை மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் சென்று அவரது மனைவி மனு அளித்துள்ளார். வாலிநோக்கம் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா, குவைத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி தனது மனைவி மெஹர்நிஷாவிடம் போனில் பேசும்போது 'முதலாளி கூப்பிடுகிறார்' என இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பின் 10 நாட்களாக அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவரது நிலை என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மெஹர்நிஷா தன்னுடைய தந்தை மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். மேலும் 10 நாட்களாக அப்பாவிடம் பேசவில்லை, விஜய் அங்கிள் என் அப்பாவை மீட்டுத் தாருங்கள்" எனச் சிறுமி கூறியது சோகத்தை ஏற்படுத்தியது.
