Ramanathapuram District | Immanuel Sekaran | தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் பலத்த பாதுகாப்பு

x

24 எஸ்.பிக்கள், 70 டிஎஸ்பிக்கள், 7 ஆயிரம் போலீசார் குவிப்பு... 'மீறினால்' எச்சரிக்கை

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் சுமார் 7 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. 7 ஆயிரம் போலீசார், 24 எஸ்.பிகள், 70 டிஎஸ்பிக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

38 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை வாகனங்கள், 600 தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளன. 500 சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு செய்யப்பட உள்ளது. இருசக்கர மற்றும் வாடகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்