திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான நிஜாம் அலிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய நிஜாம் அலிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான நிஜாம் அலிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
Published on

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதை தடுத்த திருபுவனத்தை சேர்ந்த பா.ம.க முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நிஜாம் அலி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நிஜாம் அலி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் நிஜாம் அலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஜூன் 30ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com