ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு போலீசுக்கு மாற்றம்

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேர், பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு போலீசுக்கு மாற்றம்
Published on

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, ஷர்புதீன், உள்ளிட்ட 10 பேரை போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கானது கடந்த மாதம் 25 ஆம் தேதி தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு முதல்முறையாக விசாரணைக்கு வந்ததையொட்டி திருச்சி சிறையில் இருந்த10 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 20ஆம் தேதி மீண்டும் 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 10 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com