"இனியும் அலட்சியம் காட்டாமல்.." ராமதாஸ் பரபரப்பு அறிக்கை | Ramadoss | PMK

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அவர்களை அரசு ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com