ராமதாஸ், அன்புமணி மோதல்.. உதயநிதி மறைமுக அட்வைஸ்?
ராமதாஸ், அன்புமணி மோதல்.. உதயநிதி மறைமுக அட்வைஸ்?
அரசியலில் அப்பா - மகன் உறவு மிகவும் முக்கியம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் முன்னாள் MLA-வும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின் தாலியை தொட்டு எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்பு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அப்பாவின் பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது என ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையேயான கருத்து மோதலை மறைமுகமாக சாடினார்.
Next Story
