தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
Published on
நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதிலிருந்து அத்தியாவசிய வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து உறுதியாகாத நிலையில் சுங்கக்கட்டண வசூலைத் தொடங்குவது நியாயமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் கண்மூடித் தனமாக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியுள்ளதாகவும் அறிக்கையில் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com