30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் - ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அரசை வலியுறுத்தும் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு 30 ஆண்டுகள் சிறைக் கொடுமை போதாதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் - ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அரசை வலியுறுத்தும் ராமதாஸ்
Published on
பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு 30 ஆண்டுகள் சிறைக் கொடுமை போதாதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை குறித்து விசாரிக்க, 30 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11ஆம் தேதி பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். ஆயிரத்து 7 நாட்களை கடந்தும் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், தமிழக அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com