Ramadass | Anbumani Ramadass | "அன்புமணி தனிக் கட்சி ஆரம்பிப்பது நல்லது" - ராமதாஸ் பரபரப்பு கருத்து
அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்து கொள்வதுதான் அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி தனிக் கட்சி தொடங்கினால், பொறுப்புகள் கிடைக்குமே தவிர எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள் என விமர்சித்தார். மேலும், தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது புதிதாக தொடங்கிய கட்சியைத் தவிர மற்ற அனைவரும் தன்னிடம் நலம் விசாரித்ததாக தவெகவை ராமதாஸ் மறைமுகமாக குறிப்பிட்டார்.
Next Story
