

ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவுநாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமச்சந்திர ஆதித்தனார் மணிமண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் மாலைமுரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். காயாமொழி ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.