உணவுப் பொருள் வழங்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கும் மத்திய அரசிற்கும் எந்த சிக்கலும் இல்லை என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் மோடி சுனாமி வீசியதால் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்றார். தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பாஜக சொல்லிக்கொள்ளும் வெற்றி பெறவில்லை என்றும், இதனால் இவிஎம் முறைகேடு என எதிர்கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.