

ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகிய இருவரும், கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.எனவே, இதனை கவுரவிக்கும் வகையில் இவ்விருவருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.வருகிற செப்டம்பர் 5 - ம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில், நடைபெறும் கண்கவர் விழாவில், ஈரோடு மன்சூர் அலி, கரூர் செல்வ கண்ணன் இருவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த தேசிய விருதை வழங்கி, கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.