7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தொடங்கிய மிதிவண்டி பேரணி சென்னை வந்தடைந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தொடங்கிய மிதிவண்டி பேரணி சென்னை வந்தடைந்தது. அதனை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது பேசிய அனைவரும், 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com