

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை நடிகர் ரஜினி காந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ரஜினியிடம் நீங்கள் யார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த நிலையில் சந்தோஷ் உள்ளிட்ட 3 பேர் மீது இருசக்கரவாகனத்தை திருடியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த ஷ்யாம் என்பவரது இருசக்கரவாகனத்தை திருடியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.