நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிய கோரிய மனு - வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக ரஜினி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிய கோரிய மனு - வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு
Published on

கடந்த ஜனவரி மாதம் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக, ரஜினி மீது திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அதில், பொய்யான தகவலை கூறி இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் ஆணையர், ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்த நிலையில், ரஜினிக்கு ஆதரவாக ஆறுமுகம் என்பவர் குறுக்கீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ரஜினிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யுமாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, ரஜினி மீதான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்குவதாக, ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com