ரஜினியின் அரசியல் பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது - சத்திய நாராயணன்
நடிகர் ரஜினி, முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என, அவரது சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்தார்.
* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி விழா நடந்தது.
* இதில் நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
* பின்னர் திருப்பத்தூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்றும், இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழக மக்கள் ஆதரவுடன் ரஜினி முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
