

ஜார்க்கண்ட் தேர்தலில் சாதி, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை மக்கள் புறக்கணித்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறினார். கன்னியாகுமரி வருகை தந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜார்கண்ட மக்கள் பாஜகவின் உண்மை முகத்தை உணர்ந்து, காங்கிரசிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றார். இது இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். குடியுரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்த நிதிஷ்குமார்,ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் உண்மையை அறிந்து எதிர்க்க தொடங்கி உள்ளதாகவும் சச்சின் பைலட் கூறினார்