"ஆவின் நெய்யை துபாய் ஷேக்குகள் விரும்புகின்றனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

சென்னை நந்தனத்தில் உள்ள பால்வளத் துறை அலுவலகத்தில் ஆவின் பணியாளர்களுக்கான போனஸ் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, துபாய் ஷேக்குகள் மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஆவின் நெய்யை மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.
"ஆவின் நெய்யை துபாய் ஷேக்குகள் விரும்புகின்றனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
Published on
சென்னை நந்தனத்தில் உள்ள பால்வளத் துறை அலுவலகத்தில் ஆவின் பணியாளர்களுக்கான போனஸ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பால் பொருட்கள் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் பால் பொருட்களில் எந்தவித கலப்படமும் ரசாயன பொருட்களும் இல்லை என தெரிவித்தார். எத்தனை இடங்களில் பரிசோதனை செய்தாலும் ஆவின் பொருட்கள் தரத்தை குறைத்திட முடியாது என்றும், துபாய் ஷேக்குகள் மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் ஆவின் நெய்யை மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com