"கொரோனா நெகட்டிவ் சான்றுடன் மீண்டும் ஆஜர் ஆவேன்" - முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

கொரோனா நெகடிவ் சான்றுடன் விசாரணைக்கு ஆஜராவேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆஜரானார். அப்போது கடந்த 23 ஆம் தேதி தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். பின்னர், கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர். அதையடுத்து கொரோனா தொற்று இல்லை என சான்று வந்த பின், எப்போது அழைத்தாலும் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராவேன் என, ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்தார். மேலும் சம்மன் அனுப்பும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு அறிவுறுத்தினர். பின்னர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி புறப்பட்டுச் சென்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com