அமைச்சருக்கு எதிரான வழக்கு -உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு |Chennai High Court |Minister RajaKannappan

x

அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தனக்கு எதிராக பேரையூர் மற்றும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் விதிமீறல் வழக்குகள் விசாரணைக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்