கோவையில் தியேட்டருக்குள் ஏசி வழியாக கொட்டிய மழைநீர் - வைரலாகும் வீடியோ
கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் மழைநீர் கொட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை அவிநாசி சாலையில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பிரபல திரையரங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக திரையரங்க வளாகத்திற்குள் ஏசி வழியாக புகுந்த மழைநீர் திரையரங்கினுள் கொட்டியது. இதன் காரணமாக அன்றைய தினம் மதியம் வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் திரையிடப்பட்டதாக திரையரங்க மேலாளர் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் சிலர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
Next Story
