வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி
Published on

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தயாஸ்தலம் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்தது. இதனால், அங்குள்ளவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும், மழை நீரானது கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com