சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69 ஆயிரத்து 490 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டதை தொடர்ந்து, மழைநீர் சேமிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான், சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையாகும். 38 ஆயிரத்து 507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ள மாநகராட்சி, தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.