Tiruvannamalai | அரசு கல்லூரிக்குள் புகுந்த மழைநீர்-காலை டேபிளில் வைத்து Exam எழுதிய மாணவர்கள்

அரசு கல்லூரிக்குள் புகுந்த மழைநீர்-காலை டேபிளில் வைத்து Exam எழுதிய மாணவர்கள்

Tiruvannamalai | தி.மலையில் அரசு கல்லூரிக்குள் புகுந்த மழைநீர் - காலை டேபிளில் வைத்து Exam எழுதிய மாணவர்கள்

#tiruvannamalai #tnrain #rainfall #thanthitv

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அரசு கலைக் கல்லூரி வகுப்பறைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் மற்றும் கணிதத்துறை வகுப்பறைகளில் மழைநீர் புகுந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்தது. இன்று மாதிரித் தேர்வு நடைபெற்ற நிலையில், மாணவர்கள் கால்களை மேசை மீது வைத்தபடி தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்திலும் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமமடைந்தனர். மழைநீர் வடிகால் கால்வாய்களைத் தூர்வாரி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com