"வெப்பச் சலனத்தால் மழை தொடரும்" - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
"வெப்பச் சலனத்தால் மழை தொடரும்" - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும்

சிரமத்திற்கு உள்ளாயினர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணி : கன மழை பெய்ததால் மாணவர்கள் பாதிப்பு

திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை மழை பெய்தது. இதனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று திரும்பிய மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணி நகரின் சித்தூர் சாலை அரக்கோணம் சாலை முக்கிய வீதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடுவதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருவண்ணாமலை : கனமழை - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால், வெப்பம் தனிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com