100 நாட்களுக்கு பின் சென்னையை கூலாக்கிய திடீர் மழை | Chennai Rain

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது...

கோடை வெயிலின் கடுமையான தாக்கத்தால் அனல் காற்று வீசி வந்தது... சென்னைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அதிகாலையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக திடீரென பெய்த சாரல் மழையால் மண்ணும் மக்கள் மனமும் குளிர்ந்தது...

X

Thanthi TV
www.thanthitv.com