தொடர் மழை எதிரொலி - ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

திருவள்ளூரில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
தொடர் மழை எதிரொலி - ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு
Published on
திருவள்ளூரில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியில், தற்போதைய நிலவரப்படி ஒன்று புள்ளி ஐந்து எட்டு இரண்டு, மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 587 கன அடியாக உள்ள நிலையில் சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 464 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல், புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான மூவாயிரத்து, 300 மில்லியன் கன அடியில், தற்போது 708 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர் வரத்து 520 கன அடியாகவும், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 75 கன அடியாகவும் உள்ளது. அதேபோல, சோழவரம் ஏரியில் தற்போது 121 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மற்றொரு ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 44 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 81 கன அடியாக உள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com