வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இந்த தகவலை வெளியிட்டார்.