Yercaud Rain| மழையோடு சேர்ந்த Fog - இயல்பு வாழ்க்கையை பாதித்த இயற்கை வினோதம்

மழையோடு சேர்ந்த Fog - இயல்பு வாழ்க்கையை பாதித்த இயற்கை வினோதம்

#yercaudfog #yercaudrain

சாரல் மழை, கடும் பனிமூட்டம் - ஏற்காட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது நேற்று இரவில் மட்டும் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டத்தால் மலைப்பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் செல்கின்றன. மோசமான வானிலையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, ஏற்காடு சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com