

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8 ஆயித்து 500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது.