தமிழ்நாட்டுக்கே குட்நியூஸ் சொன்ன ரயில்வே

x

பயணிகள் வரவேற்பு - நெல்லை வந்தே பாரத் பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், பெட்டிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில், பெட்டிகள் எண்ணிக்கை சில மாதங்களுக்கு முன் 8ல் இருந்து 16ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் 16ல் இருந்து 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாகவும், மங்களூர் - திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்16 இல் இருந்து இருந்து 20 பெட்டிகளாகவும் உயர்த்தி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்