

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெரும்பாலான விளக்குகள் எரியாததால், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் மட்டுமே விளக்குகள் எரிகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் எப்போதுமே விளக்குகள் எரிவதில்லை. இதே நிலைதான் ரயில் நிலையத்தின் சரக்குகள் இறக்க பயன்படும் இரண்டு மேடைகளும் இருளிலேயே மூழ்கி கிடக்கிறது. இந்த நடை மேடைகளில் உயர்மின் கோபுர விளக்குகள் இருந்தாலும் அவைகள் பெரும்பாலும் எரியாமல் அனைத்தே வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முட்புதர்கள் போன்ற அடர்த்தியான இடமாக இந்த நடைமேடைகள் இருப்பதால் ரயில் நிலையத்தில் சமூக விரோத செயல்கள்தான் அதிகளவில் அரங்கேறுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுளளனர்.