தொண்டையில் சாக்லேட் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ரயில்வே போலீசார்

x

காரமடையில் இருந்து கோவை சென்ற ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் சிக்கி, மூக்குகளில் ரத்தம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து கோவை சந்திப்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் பயணித்த குழந்தையின் தொண்டையில் சாக்லேட் ஒன்று சிக்கி, மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலுதவி செய்து குழந்தையை காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்