ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணி - பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆமைவேகத்தில் நடக்கும் மேம்பால பணிகளால், மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளைவாயல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பல தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கதை ஆகி வருகிறது. ஆகவே, அரசு இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Next Story
