``சென்னையில் 15 வயது சிறுவனை நிர்வாணமாக்கி தாக்கிய ரயில்வே அதிகாரி'' - பெற்றோர் அதிர்ச்சி புகார்
சென்னையில், 15 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ரயில்வே அதிகாரி தாக்கியதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்துள்ள புகாரில், தனது மகன், கடந்த வாரம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஒரு மாணவியிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ரயில்வே மாஸ்டர் சீனிவாசன் ராவ், தனது வீட்டுக்கு மகனை வரவழைத்து, தனியறையில் ஆடைகளை களைந்து இரும்புக்கம்பியால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டதை அடுத்து, சிறுவனின் தாயார், அவரை மீட்டு ரயில்வே மருத்துவமனையில் சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சிறுவனின் பெற்றோர், தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சீனிவாசன் ராவ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
