"ஆமை வேகத்தில் ரயில்வே ஜங்ஷன் பணிகள்" | கொந்தளிக்கும் தஞ்சை மக்கள்

x

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் கால தாமதமாக நடைபெறுவதால், பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகின்றனர்.

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் 2023, ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ. 21.17 கோடி மதிப்பில் புதிய பார்சல் அலுவலகம், காத்திருப்போர் அறை, முனையக் கட்டடம், கழிப்பறைகள், சுரங்கப்பாதை உள்ளிட்டவை புதுப்பிக்கவும், புதிய நுழைவு வாயில், கழிப்பறை வசதிகள், மேற்கூரைகள் முழுமையாக நீட்டிப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டன.

ஆனால், பணிகள் கால தாமதமாகத் தொடங்கப்பட்டது மட்டுமல்லாமல், அத்திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதில், வாகன நிறுத்துமிடம், காத்திருப்போர் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம் உள்பட சில பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டாலும், இன்னும் முடிக்கப்படாமல் உள்ள பணிகளும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்