இந்தி அலுவல் மொழியாக பயன்பாடு - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே விருது

இந்தி அலுவல் மொழி பயன்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி கோட்டத்திற்கு, ரயில்வே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தி அலுவல் மொழியாக பயன்பாடு - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே விருது
Published on

இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்தும் ரயில்வே கோட்டத்திற்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங்களில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, திருச்சி கோட்டத்திற்கு இந்த விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. 'ராஜபாஷா ரஜத் பதக்' என்ற வெள்ளி பதக்கத்தை, திருச்சி கூடுதல் கோட்ட மேலாளர் பெற்றுள்ளார். ரயில்வே துறையில் தொடர்ந்து இந்தி திணிப்பு, தமிழர்களுக்கான வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்த விருது கிடைத்திருப்பது, பரபரப்பை அதிகரித்துள்ளது. தமிழ் மொழியை புறக்கணித்து, இந்தியை திணிக்கும், இந்த முயற்சிக்கு, தி.மு.க, தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com