திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை

திருச்சி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் பிடிபட்டன.
திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை
Published on

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 22 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வந்த விமானங்களில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 130 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ கடத்தல் தங்கம், ஐ- போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com