Rahul Gandhi || Birthday || ராகுல் காந்தி பிறந்த நாள் - காங்கிரஸ் நிர்வாகி சார்பில் சிறப்பு வழிபாடு

x

ராகுல் காந்தி பிறந்த நாள் - காங்கிரஸ் நிர்வாகி சார்பில் சிறப்பு வழிபாடு

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி கோயமுத்தூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ராகுல்காந்தி, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்துடனும் பரிபூரண நலத்துடனும் நீண்ட ஆயுள் வாழவும், அவருடைய தலைமையில் மதச்சார்பற்ற, ஊழல் இல்லாத, கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சி, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடும் தேசிய மாடல் ஆட்சி அமைந்திடவும் வழிபாடு நடத்தப்பட்டது.

இதற்காக, கோவை அத்திப்பாளையம் புனித பிரான்சிஸ் அசிசி கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்தந்தை ஜான் பால், கோவை சரவணம்பட்டி சர்ச் ஆப் கிரேட் கார்ட் தலைமை பெந்தகோஸ்தின் சபையின் தலைவர் பாஸ்டர் ஸ்டீபன் ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மேலும், கோவை மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ரொக்க பரிசும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மரியாலயா மறுவாழ்வு இல்லத்தில் உணவு வழங்கியும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அருள்தாஸ், கோட்டை செல்லப்பா, ரூபட், ஆரோக்கியராஜ், வில்லியம் ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ரத்தீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்