Ambika Radha Fight| கண்ணீர் விட்டு கதறிய ராதா.. ``தப்பிக்க டிராமா போடுறா’’ என அம்பிகா ஒரே போடு

கண்ணீர் விட்டு கதறிய ராதா.. ``தப்பிக்க டிராமா போடுறா’’ என அம்பிகா ஒரே போடு

கண்ணீர் விட்டு கதறிய ராதா.. ``தப்பிக்க டிராமா போடுறா’’ என அம்பிகா ஒரே போடு

#actressradhaambikafight #radhaambikaissue

நடிகை அம்பிகா, தன்னிடம் 50 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை திருடி பண மோசடிக்கு முயன்றதாக, அவரது சகோதரியும், நடிகையுமான ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம், ஏ.ஆர். தெருவில் உள்ள வீட்டின் தரைத்தளத்தில் பிரபல நடிகை ராதா வசித்து வருகிறார். இதே வீட்டின் முதல் தளத்தில் நடிகை அம்பிகா வசித்து வருகிறார். ராதா, தொழில் மற்றும் சொந்தக் காரணங்களுக்காகக் பல ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்ததால், தான் இல்லாத நேரத்தில் வணிகப் பராமரிப்பு, மின்சாரக் கட்டணம் போன்ற செலவுகளுக்காக, தனது அறையில் சில கையொப்பமிட்ட காசோலைகளை வைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் தனது நிறுவனத்தின் பெயரை மாற்றிய ராதா, ஓராண்டுக்கு முன்பு வைத்த பழைய பெயரில் இருந்த காசோலைகளை கவனிக்காமல் விட்டுவிட்டார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி வங்கியிலிருந்து பழைய காசோலைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முயற்சி நடைபெற்றதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த மின்னஞ்சலில், 5 காசோலைகள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதா உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவித்து, அந்த காசோலைகளுக்கான பரிவர்த்தனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். வங்கியிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த காசோலைகளில் பணத்தை தனது சகோதரி அம்பிகாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றக் கோரி இருந்ததும், அதனை அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா தனது கையெழுத்தில் பூர்த்தி செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ராதா, அம்பிகா மற்றும் மல்லிகார்ஜுனா இணைந்து காசோலைகளைத் திருடி பணத்தைப் பெற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது அறைக்கே செல்ல முடியாத வகையில் அவர்கள் தடுத்து வருவதாகவும் கண்ணீர் மல்க ராதா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையரிடம் ராதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நடிகை அம்பிகா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..​ அதில், தங்களுக்கு இடையேயான சொத்துப் பிரச்சனைக்குத் தீர்வாக நடிகை ராதா, தனக்கு 5 காசோலைகளைத் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் சென்னை காவல் ஆணையரிடம் அம்பிகா அளித்த புகார் மற்றும் ஆகஸ்ட்டில் மதுரவாயல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்தத் தீர்வு எட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் இணைந்து நடத்திய ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டூடியோ பங்கு பிரிப்பது தொடர்பாக பிரச்சினை உள்ளதாகவும், வருமான வரித்துறை கைப்பற்றி திரும்ப வழங்கிய 1 கிலோ 299 கிராம் தங்கம் தொடர்பான புகாரும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இருக்கும் ARS கார்டன் சொத்தை கேரளாவில் மோசடியாகப் பதிவு செய்ததாக, திருவனந்தபுரம் வட்டியூர்காவு காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காசோலை பணமில்லாமல் திரும்பியதால் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே நடிகை ராதா, தன் மீது புகாரளித்துள்ளதாக அம்பிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com