விமரிசையாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்தநாளை முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் சின்னமனூர்லிருந்து இருந்து மேகமலை செல்லும் சாலையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனுமான ரவீந்திரநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
Next Story
