வெறி நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே வெறி நாய்கள் கடித்து 13 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் 16 ஆடுகளை தொழுவத்தில் வைத்து வளர்த்து வந்தார்.
நள்ளிரவில் கூட்டமாக வந்த வெறி நாய்கள், கம்பி வேலியை துளைத்து உள்ளே புகுந்து ஆடுகளை கடித்து குதறின. இதில் 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 ஆடுகள் படுகாயமடைந்தன.
இதனால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
