வினாத்தாள் கசிந்த விவகாரம் - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

x

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பதிவாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியில் செல்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பி.காம் பிரிவு இண்டஸ்ட்ரியல் லா தேர்வு வினாத்தாள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து புதிய வினாத்தாள்களுடன் கடந்த 30ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்