'குயின்' இணையத் தொடருக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

குயின் இணையத் தொடரை ஒளிபரப்ப தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
'குயின்' இணையத் தொடருக்கு தடை கோரி வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
Published on
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பப்படும் குயின் இணையதள தொடருக்கு தடை கோரிய சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் மற்றும் குயின் இணையத் தொடரின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இரு தரப்பும் தங்களது வாதத்தை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு இந்த தொடரால் என்ன பாதிப்பு என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com