Qatar | PM Modi | சட்டென கத்தார் மன்னருக்கு போன் போட்ட பிரதமர் மோடி - இது தான் ஆப்சன்
கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்திடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி,
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். சகோதரத்துவ நாடான கத்தார் அரசின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிப்பதாகவும்,
உரையாடல் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை இந்தியா ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்திற்கும் எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story
