காட்டெருமை காலில் சிக்கிய PVC பைப்... சொட்டும் ரத்தம்... குன்னூரில் அதிர்ச்சி
குன்னூர் ரேலியா அணை பகுதியில் சுற்றித்திரியும் ஒரு காட்டெருமையின் காலில் PVC பைப் சிக்கி, ரத்த காயத்துடன் வீக்கம் அடைந்து நடக்க முடியாமல் தவித்து வருகிறது. குன்னூர் பகுதியில் காட்டெருமை கூட்டம் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதில், காலில் பிவிசி பைப் சிக்கிய நிலையில், நடக்க முடியாமல் ஒரு காட்டெருமை தவித்துக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன், வனத்துறையினர் அதனை அகற்றி காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
